×

மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர் மல்லை சத்யா அறிமுக கூட்டம்: திமுக கூட்டணியினர் உற்சாக வரவேற்பு

மதுராந்தகம், மார்ச் 18: மதுராந்தகம் தொகுதியில், போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, அறிமுக கூட்டத்தில், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக கட்சி சார்பில், மல்லை சத்யா போட்டியிடுகிறார். இதையொட்டி, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவை, சாலவாக்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மதுராந்தகம் நகரில் அறிமுக கூட்டம் நடந்தது. திமுக நகர செயலாளர் கே.குமார் தலைமை தாங்கினார். மதிமுக நகர செயலாளர்  ராஜி  முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, வேட்பாளர் மல்லை சத்யாவை அறிமுகம் செய்தார். இதில் மதிமுக மாவட்ட பொருளாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம், ஒன்றிய செயலாளர் தரன் தலைமையில் மதிமுக ஒன்றிய செயலாளர் இளவரசு முன்னிலையில் நடந்தது. இதில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, வேட்பாளர் மல்லை சத்யாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வையாவூர் ஊராட்சியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய் கலந்து கொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைத்தார். மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், பெரும்பேர் கண்டிகை கிராமத்தில், ஒன்றிய செயலாளர் கண்ணன்,  கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளரை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், வேட்பாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதில், மதிமுக ஒன்றிய செயலாளர் கோபி, திமுக கட்சி நிர்வாகிகள் கோகுலக்கண்ணன், எழிலரசு, சிவக்குமார், ஜியாவுதீன், பேக்கரி ரமேஷ், ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அச்சிறுப்பாக்கம் வடக்கு திமுக சார்பில் எல்.எண்டத்தூர்  கிராமத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், வேட்பாளர் மல்லை சத்யாவை, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து ஒன்றிய செயலாளர்  தம்பு, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில், மதிமுக ஒன்றிய செயலாளர் கோட்டையன், திமுக நிர்வாகிகள் நாராயணன், செம்பூண்டி சிவா, கலியுக கண்ணதாசன், பத்மா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mallai Satya ,Madurantakam ,DMK ,
× RELATED மதுராந்தகம் அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!